முகப்பு விளையாட்டு செய்திகள்
வர்ணனையாளர்களாக பிரபல வீரர்கள் தேர்வு
By DIN | Published On : 18th May 2019 04:31 AM | Last Updated : 18th May 2019 04:31 AM | அ+அ அ- |

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு பிரபல கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடைசியாக கடந்த 2015-இல் உலகக் கோப்பை பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் இதில் அடங்குவார். கிரிக்கெட் உலகில் அதிகம் மதிக்கப்படும் நாஸர் ஹுசைன், இயான் பிஷப், செüரவ் கங்குலி, மெலைன் ஜோன்ஸ், குமார் சங்ககரா, மைக்கேல் ஆர்த்தர்டன், அலிஸ்ன் மிச்செல், பிரென்டன் மெக்கல்லம், கிரேம் ஸ்மித், வாஸிம் அக்ரம்.
மேலும் இவர்களோடு ஷான் போலாக், மைக்கேல் ஸ்லேட்டர், மார்க் நிக்கோலஸ், மைக்கேல் ஹோல்டிங், இஷா குஹா, பொம்மி மாங்வா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஹர்ஷா போக்லே, சைமன் டுல், இயான் ஸ்மித், ரமீஸ் ராஜா, அத்தர் அலி கான், இயான் வார்ட் ஆகியோரும் வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி டிவி சார்பில் 48 ஆட்டங்கள் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன. 46 நாள்கள் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியில் அனைத்து 10 பயிற்சி ஆட்டங்களும் நேரடியாôக ஒளிபரப்பப்பட உள்ளன.