2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...
By DIN | Published On : 18th May 2019 04:30 AM | Last Updated : 18th May 2019 04:30 AM | அ+அ அ- |

மொத்த ஆட்டங்கள் - 4
மொத்த பார்வையாளர் எண்ணிக்கை - 15, 200
வேல்ஸ் மைதானம்- கார்டிப்
கடந்த 1854-ஆம்ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் கிளாமோர்கன் கவுண்டி அணி மைதானமாக உல்ளது. கடந்த 1999 உலகக் கோப்பையில் ஓரே ஆட்டம் இங்கு நடந்தது. அதன் பின் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி
ஆட்டங்களும் நடந்தன.
முதல் கவுண்டி ஆட்டம் 1967-இல் இங்கு நடைபெற்றது.
அதிர்ச்சியான ஆட்ட முடிவுகளும் இங்கு நேரிட்டன.
2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி அரையிறுதியில் இங்கிலாந்தை-வீழ்த்தியது பாகிஸ்தான்.
ஆட்டங்கள்
ஜூன் 1-நியூஸிலாந்து-இலங்கை,
ஜூன் 4-ஆப்கானிஸ்தான்-இலங்கை,
ஜூன் 8-இங்கிலாந்து-வங்கதேசம்,
ஜூன் 15-தென்னாப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான்.
32 கேமராக்கள்
ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிநவீனமான 32 கேமராக்கள் பயன்படுத்தப்படும். பிரண்ட்-ரிவர்ஸ் வீவ் ஸ்ட்ம்ப் கேமரா, ஸ்பைடர் கேம் என நவீன கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முதன்முறையாக உலகக் கோப்பை வரலாற்றில் 360 டிகிரி ரிப்ளே ஒளிபரப்பப்படும். போட்டி நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும்.
இதுதொடர்பாக ஐசிசி ஒளிபரப்பு பிரிவு தலைவர் ஆர்த்தி தாஸ் கூறுகையில்:
ரசிகர்களுக்கு போட்டியின் அம்சங்கள் சிறப்பாக ஒளிபரப்ப வேண்டும் என்பதே ஐசிசி நோக்கம். மைதானம், வீரர்கள், அணிகள் குறித்தும் ரசிகர்களுக்கு முழுமையாக தகவல் தரப்படும். சிறந்த வர்ணனையாளர்களை ஈடுபடுத்த உள்ளோம் என்றார்.