உலகக் கோப்பை ஆட்டத்தின் போக்கையே மாற்றிய 10 தருணங்கள்
By DIN | Published On : 18th May 2019 04:26 AM | Last Updated : 18th May 2019 04:26 AM | அ+அ அ- |

1987 உலகக் கோப்பை: இந்தியா-ஆஸ்திரேலியா குரூப் ஆட்டம்
1987 உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
முதலில் ஆடிய ஆஸி. 270-6 ரன்களை குவித்தது.
பின்னர் ஆடிய இந்தியா ஸ்ரீகாந்த்-சித்து ஆகியோரின் அபார ஆட்டத்தால் 202-2 என வலுவான நிலையில் இருந்தது. 15 ஓவர்களில் 70 ரன்கள் தேவை என நிலையில் ஆடிய போது, ஆஸி. கேப்டன் ஆலன் பார்டர், இளம் பந்துவீச்சாளர் கிரெய் மெக்டர்மாட்டை பந்துவீச அனுப்பினார். அவர் நவ்ஜோத் சித்துவை போல்டாக்கினார். இதனால் இந்திய பேட்டிங் வரிசை சரிந்தது. திலிப் வெங்சர்க்கார், முகமது அஸாருதீன், ரவிசாஸ்திரி ஆகியோர் மெக்டர்மாட் பந்துவீச்சுக்கு இரையாகினர். கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 54 ரன்களுக்கு வீழ்ந்தது. 1 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.