தேசிய இளையோர் கூடைப்பந்து: அரையிறுதியில் தமிழக மகளிர்

கோவையில் 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய இளையோர் கூடைப்பந்துப் போட்டியில் தமிழக மகளிர் அணி தில்லி அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
மகளிர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் மோதிய தமிழக } தில்லி அணி வீராங்கனைகள்.
மகளிர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் மோதிய தமிழக } தில்லி அணி வீராங்கனைகள்.

கோவையில் 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய இளையோர் கூடைப்பந்துப் போட்டியில் தமிழக மகளிர் அணி தில்லி அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியன சார்பில் இப்போட்டி கோவை, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில்  கடந்த 14-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. ஆடவர் பிரிவில் 25 மாநில அணிகளும், மகளிர் பிரிவில் 24 மாநில அணிகளும் பங்கேற்றுள்ளன. 

இதில் ஞாயிற்றுக்கிழமை ஆடவர் பிரிவில் நடைபெற்ற உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் இடையிலான லீக் ஆட்டத்தில் உத்தரப் பிரதேச அணி 77-67 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. சண்டீகர் அணி 95 - 54  என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிர அணியை வீழ்த்தியது. கர்நாடக அணி 80-77 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக அணியை போராடி வென்றது. கேரள அணி 64 -60 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது. 

மகளிர் பிரிவு லீக் ஆட்டத்தில் உத்தரப் பிரதேச அணி 77-35 என்ற புள்ளிகள் கணக்கில் சண்டீகர் அணியை வீழ்த்தியது. தில்லி அணி 75-72 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா அணியை வீழ்த்தியது. சத்தீஸ்கர் அணி 83-47 என்ற புள்ளிகள் கணக்கில் மத்தியப் பிரதேச அணியை வீழ்த்தியது. குஜராத் அணி 89 - 67 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவை வீழ்த்தியது. பஞ்சாப் அணி 71 -50 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது. ராஜஸ்தான் அணி 63-52 என்ற புள்ளிகள் கணக்கில் கர்நாடகத்தை வீழ்த்தியது. 

மாலையில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி 90 -61 என்ற புள்ளிகள் கணக்கில்  தில்லி அணியை வென்றது. இதன்மூலம் தமிழக அணி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன.

மகளிர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் மோதிய தமிழக - தில்லி அணி வீராங்கனைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com