பெங்களூரு 10 கே மாரத்தான்: பெலிஹு, டிரோப் முதலிடம்

பெங்களூரு  டிசிஎஸ் உலக 10 கே மாரத்தான் பந்தயத்தில் எத்தியோப்பிய வீரர் பெலிஹு, மகளிர் பிரிவில் கென்யாவின் டிரோப் முதலிடம் பெற்றனர்.
முதல் மூன்றிடங்களைப் பெற்ற கரண் சிங், லட்சுமணன் கோவிந்தன், அவினாஷ்.
முதல் மூன்றிடங்களைப் பெற்ற கரண் சிங், லட்சுமணன் கோவிந்தன், அவினாஷ்.

பெங்களூரு  டிசிஎஸ் உலக 10 கே மாரத்தான் பந்தயத்தில் எத்தியோப்பிய வீரர் பெலிஹு, மகளிர் பிரிவில் கென்யாவின் டிரோப் முதலிடம் பெற்றனர்.
சர்வதேச தடகள சம்மேளனத்தின் கோல்ட் லேபிள் பந்தயம் எனப்படும் இதில் எத்தியோப்பியாவின் அன்டமாலக் பெலிஹு 27.56 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பெற்றார். உகாண்டா வீரர் மண்டே புஷன்டிச் 28.03 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடத்தையும், மற்றொரு எத்தியோப்பிய வீரர் பிர்ஹானு லிகேஸ் 28.23 நிமிடங்களில் கடந்து மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
மகளிர் பிரிவில் கென்ய வீராங்கனை அக்னஸ் டிரோப் 33.55 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார். எத்தியோப்பியாவின் சென்பெர் டெப்ரி, கிட்டி ஆகியோர் 2 மற்றும் 3-ஆவது இடங்களைப் பெற்றனர். இந்திய பிரிவில் சஞ்சீவனி ஜாதவ் 35.10 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடத்தைப் பெற்றார். பாருல் செளதரி, சிந்தா யாதவ் அதற்கு அடுத்த இடங்களைப் பெற்றனர்.
ஆடவர் பிரிவில் கரண் சிங் 29.55 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், லட்சுமணன் கோவிந்தன், அவினாஷ் சாப்லே ஆகியோர் அதற்கு அடுத்த இடங்களையும் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com