ஊக்க மருந்து சோதனையில் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து தோல்வி?

டோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்...
ஊக்க மருந்து சோதனையில் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து தோல்வி?

டோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி, தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ராசாத்தி தம்பதியின் மகள் கோமதி. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி, அடிப்படை வசதிகளில்லாத கிராமம், பள்ளிப் படிப்புக்கு கூட 15 கி.மீ. தொலைவு நடந்தே செல்லும் நிலை இருந்தது அவருக்குள் தடகளப் போட்டிக்கான உத்வேகத்தை அளித்தது. கடுமையான பயிற்சிகள் மூலம் தடகள வீராங்கனை ஆனார்.

ஆசிய தடகளப் போட்டியில், 30 வயதான கோமதி மாரிமுத்து 800 மீ. தூரத்தை 2:02.70 என்கிற நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனையை முந்திக்கொண்டு கோமதி தங்கம் வென்றது வியப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் பெரும்பாலான நேரங்களில் 3-ம் இடத்தில் இருந்த கோமதி கடைசி 100 மீ. ஓட்டத்தில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றார். 

இந்நிலையில், ஊக்க மருந்துப் பரிசோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வியடைந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது. போலந்தில் இந்தியத் தடகள வீராங்கனைகளுடன் இணைந்து கோமதியும் பயிற்சி பெறுவதாக இருந்தது. அந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்படும் எனத் தெரிகிறது. 

எனினும் இந்தியத் தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே சுமாரிவல்லா, இதுகுறித்துத் தனக்கு அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளிவரவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com