இந்தியா ஓபன்: அரையிறுதியில் மேரிகோம், நிஹாத் மோத வாய்ப்பு

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அரையிறுதிச் சுற்றில் உலக சாம்பியன் மேரி கோம்-சக வீராங்கனை நிஹாத் ஜரீனுடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் மோதிய தமிழ்நாடு } ராஜஸ்தான் மகளிர். 
அரையிறுதி ஆட்டத்தில் மோதிய தமிழ்நாடு } ராஜஸ்தான் மகளிர். 

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அரையிறுதிச் சுற்றில் உலக சாம்பியன் மேரி கோம்-சக வீராங்கனை நிஹாத் ஜரீனுடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 10 இந்திய வீரர்கள் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
குவாஹாட்டியில் இரண்டாவது இந்தியா ஓபன் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.  இதில் ஆசிய போட்டி தங்கப்பதக்க வீரர் அமித் பங்கால் (52 கிலோ) எளிதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் எனத் தெரிகிறது. அதே போல் 6 ஆடவர், 4 மகளிர் என 10 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு எளிதாக நுழைவதால், பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். 81 கிலோ அரையிறுதியில் பிரிஜேஷ் யாதவ், சஞ்சய், 75 கிலோ பிரிவில் பாக்கியபதி கச்சாரி, ஸ்வீட்டி போரா ஆகியோர் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். 56 கிலோ ஆடவர் பிரிவில் கவிந்தர் சிங், முகமது ஹுஸமுதீன், கெளரவ் பிதுரி, ஆகியோரும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com