இந்தியா ஓபன் குத்துச்சண்டை: மேரி கோம், சிவா தாபா வெற்றி

இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச்சுற்றில் மகளிர் பிரிவில் இந்திய முன்னணி வீராங்கனை மேரி கோம், சரிதா தேவி உள்ளிட்டோரும், ஆடவர் பிரிவில் அமித் பாங்கல், சிவா தாபா, ஆஷிஸ் உள்ளிட்டோரும் தங்கம்
இந்தியா ஓபன் குத்துச்சண்டை: மேரி கோம், சிவா தாபா வெற்றி

இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச்சுற்றில் மகளிர் பிரிவில் இந்திய முன்னணி வீராங்கனை மேரி கோம், சரிதா தேவி உள்ளிட்டோரும், ஆடவர் பிரிவில் அமித் பாங்கல், சிவா தாபா, ஆஷிஸ் உள்ளிட்டோரும் தங்கம் வென்றனர்.
ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் இந்தியா 12 தங்கம் வென்றது.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 51 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில், மிúஸாரம் வீராங்கனை வன்லால் துவாட்டியை எதிர்கொண்டார் 36 வயது மேரி கோம்.
கடுமையான போட்டிக்கு பிறகு, மேரி கோம் அவரை வீழ்த்தி தங்கம் வென்றார்.
ஆடவர் பிரிவில் 52 கிலோ, 82 கிலோ, 91 கிலோ, +91 கிலோ உள்ளிட்ட எடைப் பிரிவுகளிலும், மகளிர் பிரிவில் 51 கிலோ, 57 கிலோ, 75 கிலோ உள்ளிட்ட எடைப்பிரிவுகளிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.
ஒட்டுமொத்தமாக 12 தங்கம் வென்றது இந்தியா. 37 வயதான சரிதா தேவி (60 கிலோ), சிம்ரன்ஜித் கௌரை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கம் வென்றார்.
இந்திய வீரர் சிவா தாபா (60 கிலோ) நடப்பு சாம்பியன் மணீஷ் கௌசிக்கை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ஆஷிஸ் வென்றார். 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் வெற்றி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com