சுடச்சுட

  

  நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்தியா தோல்வி

  By DIN  |   Published on : 26th May 2019 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt4

  ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்க செய்த போல்ட்.

  உலகக் கோப்பை போட்டியையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து.
  அந்த அணியின் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் மிகச் சிறப்பாக பந்துவீசி, 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
  கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா.
  தொடக்க ஆட்டக்காரர்களான களம் கண்ட ரோஹித் சர்மா, ஷிகார் தவண் ஆகியோர் சோபிக்க தவறினர். போல்ட் பந்துவீச்சில் 2 ரன்களை மட்டுமே எடுத்து இருவரும் பெவிலியன் திரும்பினர்.
  அடுத்து வந்த கேப்டன் கோலியும் 18 ரன்களில் ஆட்டமிழக்க, லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும், ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் (4 ரன்), தோனி (17 ரன்கள்),  புவனேஸ்வர் குமார் (1 ரன்), குல்தீப் யாதவ் (19 ரன்கள்) ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஜடேஜா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 179 ரன்களை சேர்த்தது.
  180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும், ராஸ் டெய்லர் 71 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டமிழந்தனர். பும்ரா, குல்தீப், ஜடேஜா, சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 
  ஆஸி. வெற்றி: மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai