சுடச்சுட

  

  பயிற்சியின்போது காயமடைந்த இந்திய வீரர் விஜய் சங்கருக்கு எலும்பு முறிவு இல்லை என்பது ஸ்கேனில் தெரியவந்துள்ளது.
  இதனால், இந்திய அணி நிம்மதி அடைந்துள்ளது.
  கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, விஜய் சங்கருக்கு வலது கை முழங்கையில் அடிபட்டது. அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. விஜய் சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சுட்டுரையில் பிசிசிஐ தெரிவித்துள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai