சுடச்சுட

  
  spt5


  வலுவான அணிகளை வீழ்த்தி முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது இந்தியா. பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த பிட்சில் முதலில் ஆடிய இந்தியா 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எளிதான இலக்குடன் மே.இ.தீவுகள் விளையாடத் தொடங்கியது. பல்வீந்தர் சிங் சாந்து பந்தில் கார்டன் கிரினிட்ஜ் அவுட்டானார். 

  டெஸ்மான்ட் ஹெயின்ஸ்-விவ் ரிச்சர்ட்ஸ் அபாரமாக ஆடி வந்த நிலையில், ரிச்சர்ட்ஸ் இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். மதன்லால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை அடித்தார் ரிச்சர்ட்ஸ். ஆனால் பந்து தவறி உயரே சென்ற நிலையில், இந்திய ஃபீல்டர்கள் அதை பிடிக்க முயலவில்லை. 

  ஆனால் கேப்டன் கபில்தேவ் மிட் ஆனில் இருந்து 20 மீ தூரம் ஓடிச் சென்று கேட்சை பிடித்து ரிச்சர்ட்ûஸ அவுட்டாக்கினார். இதனால் ஆட்டத்தின் போக்கே மாறியது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.


  2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...

  தி ரிவர்சைட்-டர்ஹாம் 

  மொத்த ஆட்டங்கள்- 3

  மொத்த பார்வையாளர் எண்ணிக்கை - 14,000

  கடந்த 1995-இல் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் 1999 உலகக் கோப்பை போட்டியின் ஆட்டங்கள் நடைபெற்றன. 


  இங்கு அதிகபட்ச ஸ்கோர் பாகிஸ்தான் 261-6 

  ஸ்காட்லாந்துக்கு எதிராக எடுத்தது. டர்ஹாம் அணியின் சொந்த மைதானம் 
  இதுவாகும்.

  ஆட்டங்கள்

  ஜூன் 28-இலங்கை-தென்னாப்பிரிக்கா, ஜூலை 1-இலங்கை-மே.இ.தீவுகள், 
  ஜூலை 3-இங்கிலாந்து-நியூஸிலாந்து.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai