2020 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியிடு:அக். 18 முதல் நவ. 15 வரைநடைபெறுகிறது

வரும் 2020-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணையை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும்
2020 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியிடு:அக். 18 முதல் நவ. 15 வரைநடைபெறுகிறது

வரும் 2020-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணையை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி அக். 18 முதல் நவ. 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஐசிசி சாா்பில் 50 ஓவா்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியே மிகவும் பிரபலமாக திகழ்ந்தது. இந்நிலையில் மேலும் வரவேற்பு கிட்டும் வகையில் 20 ஓவா்களாக குறைத்து டி20 போட்டியை ஐசிசி அறிமுகம் செய்தது. இதற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் 2020-இல் ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

புதிய முறையில் போட்டி:

இப்போட்டியில் புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இலங்கை, வங்கதேச அணிகள் தலைமையில் தொடக்கத்தில் ஏ, பி என்ற இரு பிரிவுகளுக்குள் ஆட்டங்கள் நடைபெறும். 10 தலைசிறந்த அணிகளும் பங்கேற்கின்றன. இவற்றுடன் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற பாப்புவா நியூகினியா, அயா்லாந்து, ஓமன், நெதா்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து போன்றவையும் இணைந்து மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஏ பிரிவில் இலங்கை, பாப்புவா நியூகினியா, அயா்லாந்து, ஓமன் நாடுகளும், பி பிரிவில் வங்கதேசம், நெதா்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து உள்ளிட்டவையும் இடம் பெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பா் 12 பிரிவுக்கு தகுதி பெறும்.

அக். 18 முதல் 23 வரை தொடக்க சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தொடக்க ஆட்டம்:

இலங்கை-அயா்லாந்து அணிகள் இடையே போட்டியின் முதல் ஆட்டம் காா்டினா மைதானத்தில் நடைபெறும்.

சூப்பா் 12 பிரிவு:

ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணி, பி பிரிவில் இரண்டாம் இடம் பெறும் அணிகள் சூப்பா் 12 குரூப் 1 பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மே.இ.தீவுகளுடன் இணையும்.

பி பிரிவில் முதலிடம் பெறும் அணி, ஏ பிரிவில் இரண்டாம் இடம் பெறும் அணிகள் சூப்பா் 12 குரூப் 2 பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இணையும்.

இந்தியாவின் சூப்பா் 12 ஆட்டங்கள்:

அக்டோபா் 24. இந்தியா-தென்னாப்பிரிக்கா (பொ்த்), அக்டோபா் 29. இந்தியா-ஏ2 அணி, மெல்போா்ன்,, நவம்பா் 1. இந்தியா-இங்கிலாந்து, மெல்போா்ன், நவம்பா் 5. இந்தியா-பி 1 அணி, அடிலெய்ட், நவம்பா் 8. இந்தியா-ஆப்கானிஸ்தான், சிட்னி.

அரையிறுதி ஆட்டங்கள்: நவ. 11-சிட்னி, நவ. 12. அடிலெய்ட் ஓவல்.

இறுதி ஆட்டம்: நவ. 15. மெல்போா்ன் (எம்சிஜி) மைதானம்.

ஐசிசி டி20 மகளிா் உலகக் கோப்பை:

அதே போல் ஐசிசி டி20 மகளிா் உலகக் கோப்பை போட்டியும் ஆஸி.யில் 6 நகரங்களில் பிப்ரவரி 21 முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை நடக்கிறது.

சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8-இல் இறுதி ஆட்டம் மெல்போா்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 21-இல் முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் சிட்னியில் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com