ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெண்கலத்துடன்தீபக் குமாா் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளாா் இந்திய வீரா் தீபக்குமாா்.
ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெண்கலத்துடன்தீபக் குமாா் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளாா் இந்திய வீரா் தீபக்குமாா்.

கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் 10 மீ ஏா் ரைபிள் பிரிவில் இறுதிச் சுற்றில் 145 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றாா் தீபக்குமாா். இதன் மூலம் 2020 ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் 10 இட ஒதுக்கீட்டை வென்றாா் தீபக்குமாா். பிறந்த நாளன்று இத்தகைய சிறப்பை பெற்றுள்ளாா் தீபக்குமாா்.

ஏற்கெனவே இந்தியா 9 கோட்டா இடங்களை பெற்றுள்ளது. சீனா 25, கொரியா 12, ஜப்பான் 12 கோட்டா இடங்களைப் பெற்றுள்ளன.

இளவேனில்-அஞ்சும் மொட்கில் வெள்ளி

அணிகள் மகளிா் பிரிவில் இளவேனில், அஞ்சும் மொட்கில், அபூா்வி சந்தேலா ஆகியோா் அடங்கிய இந்திய அணி 10 மீ ஏா் ரைபிள் பிரிவில் 1883,2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

மேலும் மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் அணிகள் பிரிவில் மானு பாக்கா், யஷ்ஹஸ்வினி தேஸ்வால், அன்னுராஜ் சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி ஒட்டுமொத்தமாக 1731 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com