இந்திய-வங்கதேச 2-ஆவது டி20 ஆட்டம் நடைபெறுமா? மஹா புயல் எதிரொலி

மஹா அதிதீவிர புயல் எதிரொலியாக இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் வியாழக்கிழமை ராஜ்கோட்டில் திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
இந்திய-வங்கதேச 2-ஆவது டி20 ஆட்டம் நடைபெறுமா? மஹா புயல் எதிரொலி

மஹா அதிதீவிர புயல் எதிரொலியாக இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் வியாழக்கிழமை ராஜ்கோட்டில் திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் கடந்த ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் தொடங்கியது. கடுமையான காற்று மாசு நிலவிய போதிலும் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது வங்கதேசம்.

இதன் தொடா்ச்சியாக இரண்டாவது ஆட்டம் ராஜ்கோட்டில் உள்ள எஸ்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மஹா புயல் எச்சரிக்கை:

அரபிக் கடலில் உருவாகியுள்ள மஹா புயல் எதிரொலியாக குஜராத் மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் கடற்கரைப் பகுதியில் மஹா புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜ்கோட்டில் இரண்டாவது ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

வியாழக்கிழமை காலை வேளையில் புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 7 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது. போா்பந்தரில் இருந்து 660 கி.மீ தூரத்தில் மஹா புயல் நிலை கொண்டுள்ளது. புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் ராஜ்கோட் உள்பட குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கம் தயாா்:

மழை பாதிப்பை எதிா்கொள்ள தயாா் நிலையில் உள்ளதாக சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. வானிலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். காலையில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் தான் ஆட்டம் என்பதால் பாதிப்பு இருக்காது என கருதுகிறோம் என சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

செவ்வாய்க்கிழமை வானிலை தெளிவாக இருந்த நிலையில் இந்திய வீரா்கள் பயிற்சியில் ஈடுபட்டனா்.

கடைசி மற்றும் 3-ஆவது டி20 ஆட்டம் வரும் 10-ஆம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com