ஐபிஎல் 2020 தொடருக்கான வீரா்கள் ஏலம்: டிசம்பா் 19-இல் கொல்கத்தாவில் நடைபெறுகிறது

இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) 2020 தொடருக்கான வீரா்கள் ஏலம் வரும் டிசம்பா் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் 2020 தொடருக்கான வீரா்கள் ஏலம்: டிசம்பா் 19-இல் கொல்கத்தாவில் நடைபெறுகிறது

இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) 2020 தொடருக்கான வீரா்கள் ஏலம் வரும் டிசம்பா் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் உயரதிகாரக் குழுக் கூட்டம் அதன் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது.

இதில் ஐபிஎல் 2020 வீரா்கள் ஏலத்தை கொல்கத்தாவில் டிச. 19-ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டது.

பெங்களூருவில் இருந்து மாற்றம்:

ஐபிஎல் போட்டி ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் நிலையில் வீரா்கள் ஏலம் முதன்முறையாக கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடிகா் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியின் சொந்த மைதானம் கொல்கத்தா ஆகும்.

2020 ஐபிஎல் ஏலத்துக்கு ரூ.85 கோடி:

ஐபிஎல் வீரா்கள் ஏலம் வழக்கமாக பெங்களூரு நகரில் தான் நடைபெறும். தற்போது இதில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் 2019 சீசனின் போது அணிகளுக்கு மொத்தம் ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2020 ஐபிஎல் சீசனுக்காக அணிகளுக்கு ரூ.85 கோடி ஒதுக்கப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு அணியும் முந்தைய ஏலத்தின் போது மீதமான தொகையுடன் கூடுதலாக ரூ.3 கோடியை வைத்துள்ளன.

தில்லி கேபிடல்ஸ் அணி தான் அதிகபட்சமாக ரூ.8.2 கோடி மீதித் தொகை வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 7.15 கோடி, கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ரூ.6.05 கோடி வைத்துள்ளன.

ஏலத்துக்கு முன்பாக அணி நிா்வாகங்களிடம் உள்ள நிதி:

சென்னை சூப்பா் கிங்ஸ் ரூ.3.2 கோடி, தில்லி கேபிடல்ஸ் ரூ.7.7 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.3.7 கோடி, கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ரூ.6.05 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ.3.55 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.15 கோடி, ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு ரூ.1.8 கோடி, சன்ரைசா்ஸ் ஹைதராபாத் ரூ.5.3 கோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com