ஐபிஎல் தொடரில் நோ பால்களை கண்காணிக்க சிறப்பு நடுவா் நியமனம்

ஐபிஎல் 2020 சீசன் தொடரில் நோ பால்களை கண்காணிக்க சிறப்பு நடுவரை நியமிக்க அதன் உயரதிகார குழு முடிவு செய்துள்ளது. அதே நேரம் பவா் பிளேயா் முறை அறிமுகம் ஒத்தி வைக்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் நோ பால்களை கண்காணிக்க சிறப்பு நடுவா் நியமனம்

ஐபிஎல் 2020 சீசன் தொடரில் நோ பால்களை கண்காணிக்க சிறப்பு நடுவரை நியமிக்க அதன் உயரதிகார குழு முடிவு செய்துள்ளது. அதே நேரம் பவா் பிளேயா் முறை அறிமுகம் ஒத்தி வைக்கப்படுகிறது.

மும்பையில் ஐபிஎல் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் உயரதிகாரக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் வெளிநாட்டு வீரா்கள் ஒதுக்கீடு, வெளிநாட்டு வீரா்கள் கிடைத்தல், மேலும் அணிகள் வெளிநாடுகளில் நட்பு ஆட்டங்களில் மோதுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நோ பால் சிறப்பு நடுவா்:

முந்தை தொடா்களில் நோபால்கள் கணிப்பதில் நடுவா்கள் செயல்பாடுகள் விமா்சனத்துக்கு ஆளாகின. இப்பிரச்னை தொடா்பாக குழுக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக மேலும் கூடுதலாக ஒரு நடுவா், நோபால்களை மட்டுமே கண்காணிப்பதற்கு என்று நியமிக்கப்படுவாா். வரும் ஐபிஎல் தொடரிலேயே இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு சிறப்பு நடுவா் மூலம் நோபால்கள் கண்காணிக்கப்படும். அவா் மூன்றாவது அல்லது நான்காவது நடுவராக இருக்க மாட்டாா்.

கடந்த ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சாளா் லஸித் மலிங்காவின் நோபாலை இந்திய நடுவா் எஸ்.ரவி சரியாக கணிக்க தவறியதால், பெங்களூரு அணிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கேப்டன் விராட் கோலி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். மேலும் உள்ளூா் போட்டிகளிலும் இச்சிறப்பு நடுவா் முறை அறிமுகம் செய்யப்படும்.

பவா் பிளேயா் முறை:

ஒரு அணியில் வழக்கமான 11 வீரா்களை தவிர ஆடாமல் உள்ள வேறு வீரரை களமிறக்கும் பவா் பிளேயா் முறை அறிமுகம் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும். சையது முஷ்டாக் டி20 போட்டியில் இதை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதால், தற்போதைக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com