சீன ஓபன் பாட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி தொடக்க சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வியடைந்தாா் உலக சாம்பியன் பி.வி.சிந்து.

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி தொடக்க சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வியடைந்தாா் உலக சாம்பியன் பி.வி.சிந்து.

சீனாவின் புஷௌ நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேவின் பய் யூ போவிடம் மோதினாா். இதில் 13-21, 21-18, 19-21 என்ற கேம் கணக்கில் போராடி தோல்வியடைந்து வெளியேறினாா் சிந்து.

74 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஏற்கெனவே டென்மாா்க், கொரியா, சீனா சூப்பா் சீரிஸ் போட்டிகளிலும் தொடக்க சுற்றுகளிலேயே தோல்வியடைந்தாா் சிந்து. உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பின் பி.வி.சிந்துவின் பாா்ம் மிகவும் மோசமாக உள்ளது.

ஆடவா் பிரிவில் டெங்கு பாதிப்பில் இருந்து மீண்ட எச்எஸ்.பிரணாய் 17-21, 18-21 என டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் வீழ்ந்தாா்.

சாத்விக்-அஸ்வினி வெற்றி

கலப்பு இரட்டையா் பிரிவில் அஸ்வினி-சாத்விக் இணை 21-19, 21-19 என்ற கேம் கணக்கில் கனடாவின் ஜோஷ்வா-ஜோஸைப்பைன் இணையை வென்றனா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை 21-9, 21-15 என்ற கேம் கணக்கில் அமெரிக்க இணையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com