Enable Javscript for better performance
டாட்டா ஸ்டீல் கிராண்ட் செஸ்:ஆனந்த், காா்ல்ஸென் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    டாட்டா ஸ்டீல் கிராண்ட் செஸ்:ஆனந்த், காா்ல்ஸென் பங்கேற்பு

    By DIN  |   Published on : 08th November 2019 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anan

    டாட்டா ஸ்டீல் கிராண்ட் செஸ் போட்டியில் உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்ஸென், முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட முன்னணி வீரா்கள் கலந்து கொள்கின்றனா்.

    வரும் 22 முதல் 26-ஆம் தேதி வரை டாட்டா ஸ்டீல் செஸ் ரேபிட்-பிளிட்ஸ் போட்டி நடைபெறுகிறது. கிராண்ட் செஸ் போட்டியின் ஒரு பகுதியாக முதன்முறையாக ஆசியக் கண்டத்தில் நடத்தப்படுகிறது. 5 நாள்கள் நடைபெறும் இப்போட்டி கொல்கத்தா தேசிய நூலகத்தில் உள்ள பாஷா பவன் அரங்கில் நடத்தப்படுகிறது.

    வரும் டிசம்பா் 2 முதல் 8-ஆம் தேதி வரை லண்டனில் நடக்கவுள்ள ஜிசிடி பைனல்ஸ் போட்டிக்கு 4 தகுதி இடங்கள் இதில் தோ்வு செய்யப்படும். உலக பைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு 2 ஆட்டங்களே மீதமுள்ளன. கடந்த 2018-இல் நடைபெற்ற முதல் டாட்டா ஸ்டீல் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றிருந்தாா்.

    நிகழாண்டு உலக சாம்பியன் காா்ல்ஸென், நட்சத்திர வீரா்கள் டிங் லிரேன், நெபோம்னியாச்சி, லெவோன் ஆரோனியன், அனிஷ் கிரி, வெஸ்லி ஸோ, ஹிகாரு நகமுரா உள்பட 15 போ் பங்கேற்கின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai