முகப்பு விளையாட்டு செய்திகள்
100-வது டி20-க்கு ரோஹித்.. அப்போ 100-வது ஒருநாள் மற்றும் டெஸ்டுக்கு?
By DIN | Published On : 07th November 2019 07:49 PM | Last Updated : 07th November 2019 07:50 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் களமிறங்கிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா அடைந்துள்ளார்.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான2-வது டி20 ஆட்டம் ராஜ்காட்டில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, வங்கதேசம் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக.. ரோஹித் சர்மா படைக்கவிருக்கும் புதிய சாதனை!
இந்த ஆட்டத்தில் களமிறங்கியதன்மூலம் 100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் களமிறங்கியுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
இதேபோல் 100-வது சர்வதேச டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுனில் கவாஸ்கர் பெற்றுள்ளார். 100-வது சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கபில் தேவ் பெற்றுள்ளார். இந்த ஜாம்பவான்கள் வரிசையில் தற்போது ரோஹித் சர்மாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.