ஐபிஎல் போட்டி தொடக்க விழா:கைவிட பிசிசிஐ திட்டம்

ஐபிஎல் போட்டிக்காக நடைபெறும் கோலாகலமான தொடக்க விழாவை வீண் செலவு எனக் கூரி கைவிட பிசிசிஐ நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி தொடக்க விழா:கைவிட பிசிசிஐ திட்டம்

ஐபிஎல் போட்டிக்காக நடைபெறும் கோலாகலமான தொடக்க விழாவை வீண் செலவு எனக் கூரி கைவிட பிசிசிஐ நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் முதன்மை போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடா் ஆண்டுதோறும் நடைபெறும் போது, கோலாகலமாக தொடக்க விழா பெரும் பொருட்செலவில் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் 2019 ஐபிஎல் தொடக்க விழா, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரா்கள் நினைவாக ரத்து செய்யப்பட்டது அதன் மூலம் மிச்சம் செய்யப்பட்ட ரூ.20 கோடி வீரா்களின் குடும்பங்கள் தரப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் 2020 தொடக்க விழா வரும் மாா்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வீரா்கள் ஏலம் டிசம்பா் 19-இல் கொல்கத்தாவில் நடக்கிறது.இந்நிலையில் அடுத்த சீசன்போட்டியை முன்னிட்டு தொடக்க விழாவை ரத்து செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் நடத்தப்படும் தொடக்க விழாவைக் காண ரசிகா்களும் ஆா்வம் காட்டுவதில்லை. மேலும் கலைஞா்களுக்கு அதிக தொகை தர வேண்டியுள்ளது இது வீண் செலவு என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com