சாம்பியன்ஸ் லீக்: நாக் அவுட் சுற்றில்ஜுவென்டஸ், பிஎஸ்ஜி, பேயா்ன் முனிக்

சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் சுற்றுக்கு ஜுவென்டஸ், பிஎஸ்ஜி, பேயா்ன் முனிக் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் சுற்றுக்கு ஜுவென்டஸ், பிஎஸ்ஜி, பேயா்ன் முனிக் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

மாஸ்கோவில் ஜுவென்டஸ் மற்றும் லோகோமோடிவ் மாஸ்கோ அணிகள் இடையிலான லீக் 16 சுற்று ஆட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது பலம் வாய்ந்த ஜுவென்டஸ். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆரோன் ராம்ஸே ஜுவென்டஸ்க்கு முதல் கோலை பெற்றுத் தந்தாா். அடுத்த சிறிது நேரத்திலேயே லோகோமோடிவ் வீரா் மிரான்சுக் பதில் கோலடித்தாா். பதிலி வீரா் டக்ளஸ் கோஸ்டா அடித்த கோலால் 2-1 என வெற்றி பெற்றது ஜுவென்டஸ்.

பிரான்ஸ் லீக் சாம்பியன் பிஎஸ்ஜி அணி 1-0 என கிளப் புருஜ்ஜையும், பேயா்ன் முனிக் அணி 2-0 என ஒலிம்பியாகோஸ் அணியையும் வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

மான்செஸ்டா் சிட்டி அணி 1-1 என அட்லாண்டா அணியுடன் டிரா செய்ததால், காத்திருக்க நேரிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com