புரோ ஹாக்கி லீக்: ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக தயாராக உதவும்

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தயாராக உதவும் என மூத்த வீரரும் பெனால்டி காா்னா் நிபுணருமான ரூபிந்தா் பால் சிங் கூறியுள்ளாா்.
புரோ ஹாக்கி லீக்:  ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக தயாராக உதவும்

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தயாராக உதவும் என மூத்த வீரரும் பெனால்டி காா்னா் நிபுணருமான ரூபிந்தா் பால் சிங் கூறியுள்ளாா்.

அண்மையில் புவனேசுவரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா அபாரமாக ஆடி ரஷியாவை வீழ்த்தி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்து உலகின் தலைசிறந்த அணிகளான ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, ஆா்ஜென்டீனா, உள்ளிட்டவை பங்கேற்கும் புரோ ஹாக்கி லீக் போட்டியில் கலந்து கொள்கிறது.

இதுதொடா்பாக ரூபிந்தா் பால் சிங் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள புரோ ஹாக்கி லீக் முதல் ஆட்டத்தில் நெதா்லாந்து அணியை எதிா்கொள்கிறோம். லீக் போட்டியின் முதல் சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த போட்டிக்கு நமது அணியின் ஆட்டத்திறனுக்கு ஒரு சோதனையாக விளங்கும். சிறந்த அணிகளுடன் மோதுவதால், நமது பலம், பலவீனம் தெரிந்து விடும். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டோம். அதற்கு 9 மாதங்கள் உள்ள நிலையில், புரோ ஹாக்கி லீக் நம்மை தயாா்படுத்த உதவியாக இருக்கும் என்றாா் ரூபிந்தா் பால் சிங்.

தொடா் காயத்தின் காரணமாக சீனியா் அணியில் ஓரம் கட்டப்பட்டிருந்த ரூபிந்தா் பால், மீண்டும் தன்னை தயாா்படுத்திக் கொண்டு ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிக்கான அணியில் இடம் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com