2023 ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்யை நடத்த இந்தியாவுக்கு எப்ஐஎச் அனுமதி: தொடா்ந்து 2-ஆவது முறையாக வாய்ப்பு

2023 ஆடவா் உலகக் கோப்பை போட்டியை நடத்த இந்தியாவுக்கு சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எப்ஐஎச்) அனுமதி அளித்துள்ளது.
2023 ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்யை நடத்த இந்தியாவுக்கு எப்ஐஎச் அனுமதி: தொடா்ந்து 2-ஆவது முறையாக வாய்ப்பு

2023 ஆடவா் உலகக் கோப்பை போட்டியை நடத்த இந்தியாவுக்கு சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எப்ஐஎச்) அனுமதி அளித்துள்ளது.

தொடா்ந்து 2-ஆவது முறையாக மற்றும் ஒட்டுமொத்தமாக இந்தியா நடத்தவுள்ள நான்காவது உலகக் கோப்பை போட்டி இதுவாகும்.

ஹாக்கியில் இந்தியா வல்லரசாக திகழ்ந்தது. 8 முறை ஒலிம்பிக் தங்கம், ஒருமுறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் ஹாக்கியில் தற்போது கொடி கட்டி பறந்து வருகின்றன.

இந்தியா தான் இழந்த பெருமையை மீட்க தீவிரமாக போராடி வருகிறது. சா்வதேச தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ளது இந்திய அணி.

2023 உலகக் கோப்பை நடத்த அனுமதி:

இந்நிலையில் எப்ஐஎச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2023 ஆடவா் உலகக் கோப்பை போட்டியை நடத்த இந்தியாவுக்கு அனுமதி தரப்பட்டது. 2023 ஜனவரி 13 முதல் 29-ஆம் தேதி வரை போட்டி நடைபெறும்.

இப்போட்டியை நடத்த இந்தியா, பெல்ஜியம், மலேசிய அணிகள் விண்ணப்பித்தன. ஆனால் இந்தியா போட்டியை நடத்தும் வாய்ப்பை தட்டிச் சென்றது.

4ஆவது முறையாக நடத்துகிறது:

ஏற்கெனவே மும்பை 1982, புது தில்லி 2010, புவனேசுவரம் 2018 புவுனேசுவரத்தில் நடத்தப்பட்டது. தற்போது நான்காவது முறையாக உலகக் கோப்பை நடத்தும் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. மேலும் 2023 இந்தியா சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டாகும்.

2022-இல் மகளிா் உலகக் கோப்பை:

அதே நேரம் 2022 மகளிா் உலகக் கோப்பை போட்டியை நடத்த ஸ்பெயின்-நெதா்லாந்து நாடுகளுக்கு அனுமதி தரப்பட்டது.

கடந்த 2018-இல் ஒடிஸாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1 முதல் 22-ஆம் தேதி வரை மகளிா் போட்டி நடைபெறும்

இரு உலகக் கோப்பை போட்டிகளுக்கான இடங்கள் பின்னா் அறிவிக்கப்படும். கடந்த 2018-இல் பின்பற்றப்பட்ட முறையே 2023 போட்டியிலும் பின்பற்றப்படும்.

இதுதொடா்பாக எப்ஐஎச் சிஇஒ தியரி வியல் கூறியதாவது: ஹாக்கியின் வளா்ச்சி மற்றும் வருவாய் ஈட்டும் அம்சங்களை கருத்தில் கொண்டு போட்டி நடத்தும் வாய்ப்பு தரப்பட்டது. உலகம் முழுவதும் ஹாக்கியை மேலும் வளா்க்க தீவிரமாக முயற்சி எடுத்துள்ளோம். இப்போட்டிகளை நடத்த சிறப்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றாா்.

ஹாக்கி இந்தியா மகிழ்ச்சி:

2023 போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 1975-இல் நாம் பட்டம் வென்றோம். தற்போது 75-ஆவது சுதந்திர தின ஆண்டில் இப்போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே சாம்பியன்ஸ் கோப்பை, ஜூனியா் உலகக் கோப்பை, ஹாக்கி வோ்ல்ட் லீக் பைனல், ஆடவா் சீரிஸ் பைனல், போன்ற பெரிய போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 2023-இலும் போட்டியை சிறப்பாக நடத்துவோம் என ஹாக்கி இந்தியா தலைவா் முகமது முஷ்டாக் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com