4-ஆவது டி20: இங்கிலாந்து அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
4-ஆவது டி20: இங்கிலாந்து அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் நான்காவது ஆட்டம் நேப்பியரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை குவித்தது.

டேவிட் மலான் அதிரடி சதம்

தொடக்க வீரா்கள் டாம் பான்டன் 31, ஜானி போ்ஸ்டோ 8 ரன்களுடன் வெளியேறினா். பின்னா் களமிறங்கிய டேவிட் மலான்-கேப்டன் இயான் மொா்கன் இணை அபாரமாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா்.

மொா்கன் தலா 7 சிக்ஸா், பவுண்டரியுடன் 41 பந்துகளில் 91 ரன்களை விளாசி அவுட்டானாா்.

6 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 103 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் நின்றாா் டேவிட் மலான்.மலான் -மொா்கன் 76 பந்துகளில் 182 ரன்களை சோ்த்தனா்.

நியூஸி. தரப்பில் மிச்செல் சான்டநா் 2-32, டிம் சௌதி 1-47 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

நியூஸி. 165 ஆல் அவுட்

242 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 16.5 ஓவா்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் டிம் சௌதி 39, காலின் மன்றோ 30, மாா்டின் கப்டில் 27 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா். ஏனைய வீரா்கள் சொற்ப ரன்களுடன் அவுட்டாயினா்.

பாா்கின்சன் 4 விக்கெட்

இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாா்கின்ஸன் 4-47, கிறிஸ் ஜோா்டான் 2-24, சாம் கர்ரன், டாம் கர்ரன், பிரௌன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா். இத்தொடா் 2-2 என சமநிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com