இந்தியா அபார வெற்றி: ரோஹித் விஸ்வரூபம் 85

ராஜ்கோட்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி 85 ரன்களை
இந்தியா அபார வெற்றி: ரோஹித் விஸ்வரூபம் 85

ராஜ்கோட்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி 85 ரன்களை எடுத்தார். 
முதலில் ஆடிய வங்கதேசம் 153/6 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 154/2 ரன்களை எடுத்து வென்றது. 
இந்நிலையில் மகா புயல் எதிரொலியாக ராஜ்கோட்டில் இரண்டாவது ஆட்டம் நடைபெறுமா என அச்சம் எழுந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் லிட்டன் தாஸ்-முகமது நைம் தொடக்கம் முதலே அடித்து ஆடினர்.

லிட்டன் தாஸ் அவுட்: 4 பவுண்டரியுடன் 29 ரன்களை சேர்த்த லிட்டன் தாûஸ ரன் அவுட்டாக்கினார் ரிஷப் பந்த். அப்போது 8 ஓவர்களில் 64/1 ரன்களை எடுத்திருந்தது வங்கதேசம்.

முகமது நைம் 36: அவருக்கு பின் அதிரடியாக ஆடி வந்த நைம் 5 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். 
விக்கெட்டுகள் சரிவு: அவர்களுக்கு பின் செüமிய சர்க்கார்-முஷ்பிகுர் ரஹிம் இணைந்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டது.  எனினும் செüமிய சர்க்கார் 30 ரன்களுடனும், ரஹிம் 4 ரன்களுக்கும் சஹல் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினர். அப்போது 103/4 ரன்களை எடுத்திருந்தது வங்கதேசம். அபிப் ஹூசைன் 6 ரன்களுடன் கலீல் அகமது பந்துவீச்சில் அவுட்டானார்.  அவருக்கு பின் கேப்டன் மஹ்முத்துல்லா 4 பவுண்டரியுடன் 30 ரன்களுக்கு, சாஹர் பந்துவீச்சில் ஷிவம் துபேவிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.  மொஸதேக் ஹுசேன் 7, அமினுல் இஸ்லாம் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்திருந்தது வங்கதேசம்.
சஹல் 2 விக்கெட்: இந்திய தரப்பில் சஹல் 2-28 விக்கெட்டையும், தீபக், கலீல், சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
154 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் இணை வங்கதேச பந்துவீச்சை பந்தாடியது. ரோஹித் சர்மாஅதிரடியாக பேட்டிங் செய்து பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசியதால் ஸ்கோர் உயர்ந்தது.
ரோஹித் 18-ஆவது அரைசதம்: பிரம்மாண்ட சிக்ஸருடன் தனது 18-ஆவது டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார் ரோஹித் சர்மா. 10-ஆவது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 113  ரன்களை எடுத்திருந்தது இந்தியா. 
ரோஹித் ஹாட்ரிக் சிக்ஸர்: 
மொஸதேக் ஹூசேன் பந்துவீச்சில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசினார் ரோஹித். 
ஷிகர் தவன் 31: நிதானமாக ஆடிக் கொண்டிருந்த ஷிகர் தவன் 31 ரன்களுடன் அமினுல் இஸ்லாம் பந்தில் போல்டாகி வெளியேறினார். 
ரோஹித் சர்மா 85:  இதைத் தொடர்ந்து தலா 6 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 85 ரன்களை விளாசிய ரோஹித் சர்மா, அமினுல் பந்துவீச்சில் மிதுனிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
பின்னர் இளம் வீரர்கள் ஷிரேயஸ் ஐயர் 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 24 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 8 ரன்களுடனும்அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
4 ஓவர்கள் மீதமிருக்க 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை குவித்து வெற்றி இலக்கை எட்டியது இந்தியா. வங்கதேசத் தரப்பில் அமினுல் இஸ்லாம் 2-29 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


100-ஆவது டி20யில் ஆடும் முதல் இந்திய வீரர் ரோஹித் சர்மா:

இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் சர்மா தனது 100-ஆவது டி20 ஆட்டத்தில் பங்கேற்று சாதனை படைத்தார். ஆடவர் பிரிவில் முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை ரோஹித் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெüருக்கு பின் 100-ஆவது டி20 ஆடும் வீரராக திகழ்கிறார் ரோஹித் சர்மா.
ஏற்கெனவே வங்கதேசத்துடன் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் 9 ரன்களை எடுத்த நிலையில் ஒட்டுமொத்தமாக 2452 ரன்களை எடுத்து டி20யில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். ஸ்ட்ரைக் ரேட் 136.67 உடன் நான்கு சதம், 17 அரைசதங்களும் அடித்துள்ளார் ரோஹித்.
நான் இத்தனை ஆட்டங்கள் ஆடுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் நீண்ட பயணமாக உள்ளது. 12 ஆண்டுகளில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தேன். அனுபவத்தின் அடிப்படையில் எனது ஆட்டத்தை புரிந்து கொண்டேன். கடந்த 2007 முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் டர்பனில் இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் அறிமுகம் ஆனேன்.  இந்தியாவுக்காக 100-ஆவது டி20 ஆட்டத்தில் ஆடுவதை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என விடியோ பதிவில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com