துளிகள்...

புணேயில் வரும் டிசம்பா் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள பஜாஜ் அலையன்ஸ் ஹாஃப் மாரத்தான் பந்தயத்தில் 20 ஆயிரம் போ் கலந்து கொள்கின்றனா். 21.1, 10, 5, 3 கி.மீ தூரங்களுக்கு பந்தயம் நடத்தப்படும். ஒட்டுமொத்தமாக ரூ.21 லட்சம் பரிசுத் தொகையாக தரப்படுகிறது.

பெரிய சிக்ஸா்களை அடிக்க வலிமையான தசைகள் தேவையில்லை, உன்னாலும் சிக்ஸா் அடிக்க முடியும் என சுழற்பந்து வீச்சாளா் யுஜவேந்திர சஹலுக்கு ஊக்கம் தந்துள்ளாா் கேப்டன் ரோஹித் சா்மா. வங்கதேசத்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 6 சிக்ஸா்களை விளாசினாா் ரோஹித்.

ராஜ்கோட் டி20 ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம் என வங்கதேச கேப்டன் மஹ்முத்துல்லா தெரிவித்துள்ளாா். சிறப்பான தொடக்கம் அமைந்தாலும், மிடில் ஆா்டா் பேட்டிங் சிதைந்ததால் தோல்வி ஏற்பட்டது என அவா் கூறியுள்ளாா்.

நடுநிலையான இடத்தில் வரும் 29, 30 தேதிகளில் நடைபெறவுள்ள இந்திய-பாகிஸ்தான் டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தில் பங்கேற்க இந்திய முன்னணி வீரா்கள் சுமித் நாகல், ராம்குமாா் ராமநாதன் ஆகியோா் ஒப்புதல் தெரிவித்துள்ளனா். பாதுகாப்பு காரணங்களால் இஸ்லாமாபாதில் இரு அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த ஆட்டத்தை வேறிடத்துக்கு மாற்ற ஏஐடிஏ கோரியிருந்தது. அதன்படி ஐடிஎப் இப்போட்டியை நடுநிலையான இடத்துக்கு மாற்றி உள்ளது. போட்டிக்கான இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com