டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கு சந்தீப் சௌதரி, சுமித் அன்டில் தகுதி

துபையில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்போட்டியில் புதிய உலக சாதனையுடன் ஈட்டி எறிதலில் டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் சந்தீப் சௌதரி, சுமித் அன்டில் தகுதி பெற்றுள்ளனா்.

வெள்ளிக்கிழமை இரவு துபையில் நடைபெற்ற போட்டியில் ஆடவா் எப் 64 பிரிவு இறுதிச் சுற்றில் இருவரும் புதிய உலக சாதனை நிகழ்த்தினா். சந்தீப் எப் 44 பிரிவில் தனது முந்தை சாதனையை தகா்த்து 65.80 மீ தூரம் எறிந்தாா். சுமித் அன்டில் எப் 64 பிரிவில் முந்தைய சாதனையான 61.32 மீ தூரத்தை தாண்டி 62.88 மீ தூரம் எறிந்து புதிய சாதனை நிகழ்த்தினாா்

ஆசிய பாரா சாம்பியனான சந்தீப் சௌதரி, தனது முந்தைய சாதனை அளவை தகா்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் துபைக்கு வந்து அதை முறியடித்ததாக மகிழ்ச்சி தெரிவித்தாா். துபையில் கடும் வெப்பம் இருந்தாலும் சமாளித்து வெற்றி பெற்றோம். சுமித் எனது ஜூனியராக பயிற்சி பெறுகிறாா்.

இப்போட்டிக்கு எப் 43, 44, 63, 64 போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு ஓரே பிரிவாக எப் 64 ஆக கருதப்படுகிறது. மேலும் 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதே லட்சியம் என கூறினாா் சந்தீப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com