துளிகள்...

சௌரவ் கங்குலி தலைமையிலான புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முதல் ஆண்டு

சௌரவ் கங்குலி தலைமையிலான புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முதல் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (ஏஜிஎம்) வரும் டிசம்பா் 1-ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் கலந்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

---------------

இந்தியாவின் நம்பா் ஒன் டென்னிஸ் வீரா் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தந்தை எஸ்ஜி.பிரபாகரன் சனிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானாா். கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவா், பிரஜ்னேஷை சிறந்த பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்கு அனுப்பினாா். வரும் 28-ஆம் தேதி கொச்சியில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் அவரது தந்தை பிரபாகரன் இறந்துள்ளாா். தற்போது புணேயில் திங்கள்கிழமை தொடங்கும் சேலஞ்சா் போட்டியில் கலந்து கொள்கிறாா் பிரஜ்னேஷ்.

-------------------

வரும் 2020-இல் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோா் பிஃபா மகளிா் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்வீடனின் தாமஸ் டென்னா்பி நியமிக்கப்பட்டுள்ளாா். 30 ஆண்டுகள் பயிற்சி அனுபவம் வாய்ந்த இவரது பயிற்சியில் ஸ்வீடன் தேசிய மகளிரணி 2011 பிஃபா உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.

----------------

தோஹாவில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ உலக ஆடவா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரா் சௌரவ் கோஷல் தகுதி பெற்றுள்ளாா்.

--------------------

ஊக்க மருந்து சோதனையால் 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த இளம் வீரா் பிரித்வி ஷா வரும் 15-ஆம் தேதி முதல் தடைக்காலம் முடியும் நிலையில், சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கோப்பை போட்டிக்கான மும்பை அணியில் பங்கேற்று ஆட உள்ளாா்.

---------------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com