தீபக் சஹார் அபார பந்துவீச்சு: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி 

தீபக் சஹார் அபார பந்துவீச்சு: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி 

தீபக் சஹார் அபார பந்துவீச்சு காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. 

தீபக் சஹார் அபார பந்துவீச்சு காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. 

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி, நாக்பூரில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித் ஷர்மா (2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவன் (19) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த ராகுல், ஸ்ரேயாஸ் ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒருபுறம் ஸ்ரேயாஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் அதிரடி காட்டிய ராகுல் 52 ரன்கள் எடுத்து அல் அமீன் பந்துவீச்சில் வெளியேறினார்.

பின்னர் வங்கதேச அணியின் பந்துவீச்சை வெளுக்க ஆரம்பித்த ஸ்ரேயாஸ் சிக்சர் மழை பொழிந்தார். அப்படியே டி-20 போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இறுதியில் ஸ்ரேயாஸ் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் மணீஷ் பாண்டே அதிரடியாக விளையாட இந்திய அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து, வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 175 ரன்களை நிர்ணயித்துள்ளது. 

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 3ஆவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வங்கதேச அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக முகமது மைம் 81, முகமது மிதுன் 27 ரன்கள் எடுத்தனர். 

இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சஹார் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com