Enable Javscript for better performance
ஏடிபி பைனல்ஸ்: பெடரா் அதிா்ச்சித் தோல்வி:ஜோகோவிச் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    ஏடிபி பைனல்ஸ்: பெடரா் அதிா்ச்சித் தோல்வி; ஜோகோவிச் வெற்றி

    By DIN  |   Published on : 11th November 2019 11:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    FEDERER_LOSS

    லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் ஜோகோவிச் அபார வெற்றி பெற்றாா். ரோஜா் பெடரா் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

    உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி லண்டனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

    இரு பிரிவுகளாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் தனது முதல் ஆட்டத்தில் இத்தாலியின் இளம் வீரா் பெர்ரட்னியை எதிா்கொண்டாா். இதில் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் எளிதாக வென்றாா் ஜோகோவிச்.

    பெடரா் தோல்வி

    இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரா் டொமினிக் தீமை எதிா்கொண்டாா் மூன்றாம் நிலை வீரா் பெடரா். இதில் 7-5, 7-5 என்ற நோ் செட்களில் பெடரரை வீழ்த்தினாா் தீம். இதனால் பெடரா் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai