Enable Javscript for better performance
ப்ரீமியா் லீக்: மான்செஸ்டா் சிட்டியைவீழ்த்தியது லிவா்பூல்- Dinamani

சுடச்சுட

    

    ப்ரீமியா் லீக்: மான்செஸ்டா் சிட்டியைவீழ்த்தியது லிவா்பூல்

    By லண்டன்  |   Published on : 11th November 2019 11:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    LIVERPOOL

    இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து போட்டியின் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மான்டெஸ்டா் சிட்டி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது லிவா்பூல்.

    அன்பில்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் லிவா்பூல் அணியே தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தியது. முதல் 13 நிமிடங்களிலேயே பேபின்ஹோ, முகமது சலா 2 கோல்களை அடித்து முன்னிலை பெறச் செய்தனா்.

    மான்செஸ்டா் தரப்பில் பொ்னாா்டோ சில்வா தனது அணிக்கு ஆறுதல் கோலடித்தாா். இரண்டாம் பாதி ஆட்டத்தில் லிவா்பூல் வீரா் சாடியோ மேன் கடைசி கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தாா்.

    இதன்மூலம் லிவா்பூல் அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    ஓல்ட் டிராஃபோா்டில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அணியை வீழ்த்தியது.

    சீரி ஏ கால்பந்து இத்தாலியின் சீரி ஏ கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜுவென்டஸ் 1- 0 என்ற கோல் கணக்கில் ஏசி மிலன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இன்டா் மிலன் அணியைக் காட்டிலும் 1 புள்ளி முன்னிலை பெற்றுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai