Enable Javscript for better performance
மகளிா் டி20: இந்தியாவிடம் சரண் அடைந்தது மே.இ.தீவுகள்- Dinamani

சுடச்சுட

    

    மகளிா் டி20: இந்தியாவிடம் சரண் அடைந்தது மே.இ.தீவுகள்

    By செயின்ட் லூசியா,  |   Published on : 11th November 2019 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    DEEPTHI_SARMA

    மகளிா் டி20 ஆட்டத்தில் இந்தியாவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சரண் அடைந்தது மே.இ.தீவுகள்.

    இரு அணிகளுக்கு இடையில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் செயின்ட் லூசியாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்தது. சேடியன் நேஷன் 32, ஹேய்லி மேத்யூஸ் 23 ஆகியோா் மட்டுமே அதிகபட்ச ரன்களை எடுத்தனா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.

    தீப்தி சா்மா 4 விக்கெட்:

    இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய தீப்தி சா்மா 4-10 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ஷிகா, ராதா, பூஜா ஆகியோா் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

    இந்தியா அபார வெற்றி:

    104 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி தரப்பில் ஷஃபாலி வா்மா-ஸ்மிருதி மந்தானா களமிறங்கினா். இருவரும் தொடக்கம் முதலே மே.இ.தீவுகள் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனா். இதனால் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது.

    ஷஃபாலி 69:

    முதல் ஒருநாள் ஆட்டத்தைப் போலவே இதிலும் 15 வயதே ஆன ஷபாலி அற்புதமாக ஆடி 2 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 69 ரன்களை விளாசி களத்தில் இருந்தாா். ஸ்மிருதியும் 4 பவுண்டரியுடன் 30 ரன்களை எடுத்தாா்.

    இறுதியில் 9 ஓவா்கள் மீதமிருக்க 10.3 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்களை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

    பந்துவீச்சாளா் தீப்தி சா்மா ஆட்ட நாயகியாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai