ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் மூலம் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் மூலம் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.

ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் ல்கனௌவில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் அரைசதம் அடித்த அஸ்கார் அப்கான்  86 ரன்களும், ஹஸ்ரதுல்லா மற்றும் முகமது நபி தலா 50 ரன்கள் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஷெப்பர்ட் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து, 250 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது.

ஷை ஹோப்பின் அபார சதத்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷை ஹோப் 109 ரன்கள் குவித்தார்.

இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை ஷை ஹோப்பும், தொடர்நாயகன் விருதை ராஸ்டன் சேஸும் தட்டிச் சென்றனர்.

ஒருநாள் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரும், ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com