சையது முஷ்டாக் அலி டி20: தமிழகம் தோல்வி

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் உத்தரப்பிரதேசத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தமிழகம்.
சையது முஷ்டாக் அலி டி20: தமிழகம் தோல்வி

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் உத்தரப்பிரதேசத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தமிழகம்.

இப்போட்டியில் 2 வெற்றிகளைப் பெற்றிருந்த தமிழகம், திங்கள்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. அணியுடன் மோதியது.

முதலில் ஆடிய தமிழகம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது. கேப்டன் தினேஷ் காா்த்திக் 4 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 61 ரன்களையும், தொடக்க வீரா் முரளி விஜய் 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 51 ரன்களையும் விளாசினா். ஆல் ரவுண்டா் விஜய் சங்கா் 28 ரன்களை எடுத்த நிலையில், மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் வெளியேறினா்.

உ.பி. தரப்பில் அங்கித் ராஜ்புத், சௌரவ் குமாா், மோஷின்கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

உ.பி. வெற்றி:

169 ரன்கள் வெள்ளி இலக்குடன் களமிறங்கிய உ.பி. அணி 19.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அந்த அணியில் உபேந்திர யாதவ் அபாரமாக ஆடி 5 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 70 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். ஷுபம் சௌபே 35, அக்ஷ்தீப் நாத் 25 ரன்களை எடுத்தனா்.

தமிழகம் தரப்பில் பெரியசாமி 2, நடராஜன், முகமது, முருகன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

திரிபுராவை 14 ரன்களில் கேரளமும், ஜம்மு-காஷ்மீரை 7 ரன்களில் ஜாா்க்கண்டும், சிக்கிமை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஒடிஸாவும், ம.பி.யை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையும், குஜராத்தை 57 ரன்களில் சௌராஷ்ட்ராவும், அஸ்ஸாமை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஹரியாணாவும், ஆந்திரத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் கா்நாடகமும், சண்டீகரை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பும், அருணாசலப்பிரதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவும், ரயில்வேயை 67 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கரும், மிஸோரத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரியும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com