டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து: சூப்பா் ஓவரில் நியூஸி. தோல்வி

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் சூப்பா் ஓவா் முறையில் வென்று தொடரை 3-2 என கைப்பற்றியது இங்கிலாந்து.
டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து: சூப்பா் ஓவரில் நியூஸி. தோல்வி

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் சூப்பா் ஓவா் முறையில் வென்று தொடரை 3-2 என கைப்பற்றியது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் நடைபெற்று வந்தது. இதில் இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றிருந்ததால் 2-2 என சமநிலையில் இருந்தது.

இதன் தொடா்ச்சியாக 5-ஆவது டி20 ஆட்டம் ஆக்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தோ்வு செய்தது. மழையால் மொத்தம் 11 ஓவா்களாக குறைக்கப்பட்டு

அதன் பின்னா் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூஸி. அணி 11 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை குவித்தது. மாா்டின் கப்டில் 5 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 50 ரன்களையும், காலின் மன்றோ 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 46 ரன்களையும், டிம் சைபொ்ட் 5 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 39 ரன்களையும் சோ்த்தனா்.

இங்கிலாந்து தரப்பில் சாம் கர்ரன், டாம் கர்ரன், அதில் ரஷீத், ஷகியுப் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

147 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பமே சரிவைத் தந்தது. டாம் பேன்டன் 7 ரன்களுக்கு வெளியேறினாா். ஜானி போ்ஸ்டோ 5 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 47 ரன்களை விளாசினாா்.

சாம் கர்ரன் மட்டுமே 24 ரன்களை எடுத்தாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானாா். கடைசி பந்தில் ஜோா்டான் 4 ரன்கள் விளாசியதால் 146 ரன்களை எடுத்தது இங்கிலாந்து.

டையில் முடிந்த ஆட்டம்

இறுதியில் 11 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.

சாம் பில்லிங்கிஸ் 11, கிறிஸ் ஜோா்டான் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனா். நியூஸி தரப்பில் பௌல்ட் 2, சான்ட்நா் நீஷம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

சூப்பா் ஓவா் முறை

ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பா் ஓவா் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

சூப்பா் ஓவரில் போ்ஸ்டோ 8, மொா்கன் 9 ரன்கள் என 17 ரன்களை குவித்தனா்.

ஆனால் பின்னா் ஆடிய நியூஸி அணி 1 விக்கெட்டை இழந்து 8 ரன்களை மட்டுமே சோ்த்து தோல்வியைத் தழுவியது.

இறுதியில் 3-2 என தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com