அந்தி சாயும் நேரத்தில் பிங்க் நிற பந்தை காண்பது கடினமாக இருக்கும்

பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் போது, அந்தி சாயும் வேளையில் பிங்க் நிற பந்தைக் காண்பது சுற்று கடினமாக இருக்கும் என இந்திய பேட்ஸ்மேன் சேதேஸ்வர் புஜாரா கூறியுள்ளார்.
அந்தி சாயும் நேரத்தில் பிங்க் நிற பந்தை காண்பது கடினமாக இருக்கும்

பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் போது, அந்தி சாயும் வேளையில் பிங்க் நிற பந்தைக் காண்பது சுற்று கடினமாக இருக்கும் என இந்திய பேட்ஸ்மேன் சேதேஸ்வர் புஜாரா கூறியுள்ளார்.
வங்கதேசம்-இந்தியா இடையே முதன்முறையாக கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் வரும் 22-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பனிமூட்டம், மின்னொளி வெளிச்சம் உள்பட பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் நடைபெறவுள்ளது. எஸ்ஜி  பிங்க் பந்துகள் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன.
பெங்களூருவில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
துலீப் கோப்பை போட்டியில் முன்பு பிங்க் நிற பந்துகளைக் கொண்டு ஆடியுள்ளோம். அது சிறந்த அனுபவமாக இருந்தது. உள்ளூர் போட்டிகளில் பிங்க் நிற பந்துடன் ஆடியது சிறப்பாக இருந்தது. 
பெரும்பாலான வீரர்கள் தங்கள் வாழ்நாளில் முதன்முறையாக பிங்க் நிற பந்துடன் ஆட உள்ளனர். மயங்க் அகர்வால், ஹனுமா, குல்தீப் யாதவ் ஆகியோர் குக்கபுரா பிங்க் பந்துடன் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். பகல் நேரத்தில் பந்தை காண்பதில் எந்த பிரச்னையும் இல்லை. அந்தி சாயும் நேரம் மற்றும் மின்னொளியில் பந்தை காண்பது தான் கடினம் என்றார் புஜாரா.


பிங்க் நிற பந்தை ஆடுவதில் சிக்கல் இருக்காது

பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்கு முன்பு மூன்று அல்லது நான்கு முறை பயிற்சி பெறுவது உதவியாக அமையும். இது ஒரு புதிய சவால் தான். எவ்வாறு நிலைமை  இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. எவ்வாறு பந்து ஸ்விங் ஆகும். ஒவ்வொரு ஆட்ட நேரத்தில் பந்து எவ்வாறு செயல்படும் என்பதை பயிற்சியின் போது அறியலாம். பந்தை நிதானமான எதிர்கொண்டு, உடலோடு ஒட்டி ஆடினால் எளிதாக இருக்கும்.  பிங்க் நிற பந்துக்கு ஏற்றவாறு ஆடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றார் ரஹானே.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மின்னொளியில் பிங்க் நிற பந்துகளுடன் மயங்க் அகர்வால், ரஹானே, ஜடேஜா, ஷமி, புஜாரா உள்ளிட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com