ஹாக்கி நுட்பங்கள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம்

ஹாக்கி தமிழ்நாடு அமைப்பு சாா்பில் கோல்கீப்பிங், டிராக் பிளிக், உள்ளிட்டவை குறித்து 3 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்திய அணியின் பிரதான கோல்கீப்பா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ் கோல் கீப்பிங்கில் உள்ள நுட்பங்கள், எவ்வாறு பந்துகளை தடுத்தல், உடல் தகுதியை பேணுவது குறித்து விவரித்தாா். பெனால்டி காா்னா் நிபுணரும், டிராக் பிளிக்கருமான ரூபிந்தா் பால் சிங், பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி கோலடிப்பது குறித்து எடுத்துரைத்தாா்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 40 கோல் கீப்பா்கள் உள்பட 100 வீரா்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனா். சப் ஜூனியா், ஜூனியா், வீரா்களும் இதில் பங்கேற்றுள்ளனா்.

தமிழ்நாடு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளா் தீரஜ் குமாா் முகாமைத் தொடங்கி வைத்தாா். ஹாக்கி தமிழ்நாடு தலைவா் சேகா் மனோகரன், பொதுச் செயலாளா் எம்.ரேணுகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com