விராட் கோலியும் டக் அவுட்களும்: புள்ளிவிவரங்கள் சொல்லும் கதை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 10 தடவை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். 
விராட் கோலியும் டக் அவுட்களும்: புள்ளிவிவரங்கள் சொல்லும் கதை!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. 

இந்தியப் பந்துவீச்சாளா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 26 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்திருந்தது.

இன்று, நன்கு விளையாடி வந்த புஜாரா 54 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இந்த டெஸ்டில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா நேற்று 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல விராட் கோலியும் அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு பந்துகள் மட்டும் எதிர்கொண்டு டக் அவுட் ஆனார். டிஆர்எஸ் முறையில் அவரை எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் பந்துவீச்சாளர் அபு ஜெயத். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 10 தடவை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். 

விராட் கோலி - 10 டக் அவுட்கள்

* நான்கு முறை முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். (கோல்டன் டக்)

* இரண்டாவது பந்தில் 4 முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். (சில்வர் டக்)

* ஒரு முறை நான்காவது பந்திலும் இன்னொரு முறை 11-வது பந்திலும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

இவற்றில் 6 முறை கேட்ச் கொடுத்தும் 3 முறை எல்பிடபிள்யூ முறையிலும் 1 முறை போல்ட் ஆகியும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார் கோலி.

* 7000 டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்களில் குறைந்த இன்னிங்ஸில் 10 முறை டக் அவுட் ஆன வீரர் விராட் கோலி தான். 140 இன்னிங்ஸிலேயே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளார். அடுத்ததாக சோபர்ஸ் 142 இன்னிங்ஸில் 10 தடவை டக் அவுட் ஆகியுள்ளார். அதிகபட்சமாக ஆலன் பார்டர் 10 தடவை டக் அவுட் ஆக, 239 இன்னிங்ஸ்களை எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com