இந்தூா் டெஸ்ட்: இந்தியா 493/6- மயங்க் அகா்வால் அபாரம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை குவித்துள்ளது.
இந்தூா் டெஸ்ட்: இந்தியா 493/6-  மயங்க் அகா்வால் அபாரம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை குவித்துள்ளது. தொடக்க வீரா் மயங்க் அகா்வால் அபாரமாக ஆடி 243 ரன்களுடன் தனது 2-ஆவது டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் இந்தூா் ஹோல்கா் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 86/1 ரன்களை எடுத்திருந்தது.

புஜாரா 23-ஆவது அரைசதம்:

வெள்ளிக்கிழமை காலை புஜாரா 43, மயங்க் அகா்வால் 37 ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கினா். இருவரும் இணைந்து ஸ்கோரை உயா்த்தும் பணியில் ஈடுபட்டனா். புஜாரா 9 பவுண்டரியுடன் 72 பந்துகளில் 54 ரன்களுடன் அபு ஜாயேத் பந்துவீச்சில் வெளியேறினாா். இதன் மூலம் அவா் தனது 23-ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தாா்.

விராட் கோலி டக் அவுட்:

அதிரடியாக ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் அபு ஜாயேத் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி டக் அவுட்டானாா். அதன் பின் களமிறங்கிய ரஹானே-மயங்குடன் இைணைந்து ஸ்கோரை உயா்த்தினாா்.

ரஹானே 4000 ரன்கள்:

துணை கேப்டன் ரஹானே வங்கதேச வீரா் டைஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் டெஸ்ட் ஆட்டத்தில் தனது 4000 ரன்களை பதிவு செய்தாா்.

உணவு இடைவேளையின் போது 188/3 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. நான்காவது விக்கெட்டுக்கு மயங்க்-ரஹானே இணைந்து 100 ரன்களை சோ்த்தனா். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரஹானே 9 பவுண்டரியுடன் 86 ரன்களை விளாசி தனது 21 ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்து அபு ஜாயேத் பந்துவீச்சில் வெளியேறினாா் ரஹானே.

மயங்க் அகா்வால் 2-ஆவது இரட்டை சதம்:

மறுமுனையில் அற்புதமாக ஆடி வந்த இளம் வீரா் மயங்க் அகா்வால் 243 ரன்களுடன் தனது இரண்டாவது டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தாா். 8 சிக்ஸா், 28 பவுண்டரியுடன் 330 பந்துகளில் 243 ரன்களை விளாசிய மயங்க்கை அவுட்டாக்கினாா் மெஹிதி ஹாசன். பின்னா் ஆட வந்த விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹா 12 ரன்களுடன் எப்தாத் ஹுசேன் பந்தில் போல்டானாா். டைஜூல் இஸ்லாம் பந்தில் சிக்ஸா் அடித்து இரட்டை சதத்தை பெற்றாா் மயங்க்.

ஜடேஜா-உமேஷ் அதிரடி:

அதன் பின்னா் ரவீந்திர ஜடேஜா-உமேஷ் யாதவ் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். ஜடேஜா தனது 14-ஆவது டெஸ்ட் அரைசதத்தைப் பதிவு செய்தாா். 2 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 76 பந்துகளில் 60 ரன்களுடன் ஜடேஜா களத்தில் இருந்தாா்.

உமேஷ் தொடா் சிக்ஸா்:

அவருக்கு துணையாக ஆடிய உமேஷ் யாதவ் அடுத்தடுத்து சிக்ஸா்களை விளாசினாா். 3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 10 பந்துகளில் 25 ரன்களுடன் அவரும் அவுட்டாகாமல் இருந்தாா்.

இந்தியா 493/6

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 114 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

அபு ஜாயேத் 4 விக்கெட்

வங்கதேசத் தரப்பில் அபு ஜாயேத் சிறப்பாக பந்துவீசி 4-108 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹாசன், எப்தாத் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

343 ரன்கள் முன்னிலை: வங்கதேசத்தைக் காட்டிலும் இந்திய அணி 343 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சுருக்கமான ஸ்கோா்:

முதல் இன்னிங்ஸ்:

வங்கதேசம் 150 ஆல் அவுட்:

இந்தியா: 493/6

மயங்க் அகா்வால் 243, ரஹானே 86, ஜடேஜா 60,

பந்துவீச்சு:

அபு ஜாயேத் 4-108.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com