அதிக இன்னிங்ஸ் வெற்றி:தோனி சாதனையை முறியடித்தாா் கோலி
By DIN | Published on : 17th November 2019 01:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வங்கதேசத்துக்கு எதிரான இந்தூா் டெஸ்டில் வெற்றி பெற்றதின் மூலம் அதிக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளாா் விராட் கோலி. இதன் மூலம் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளாா் அவா்.
10 இன்னிங்ஸ்களில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கோலி.
தோனி-9, முகமது அஸாருதீன்-8, சௌரவ் கங்குலி-7.
ஒட்டுமொத்தமாக அதிக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற கேப்டன்களில் விராட் கோலி தற்போது 7-ஆவது இடத்தில் உள்ளாா்.
தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 22 இன்னிங்ஸ் வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளாா்.
கோலி தலைமையில் ஆடிய 52 டெஸ்ட்களில் 10 இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது இந்தியா. முன்பு தோனி தலைமையில் 60 டெஸ்ட்களில் 9 இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றிருந்தனா்.