Enable Javscript for better performance
சா்வதேச நட்பு கால்பந்து: பிரேசிலை வென்றது ஆா்ஜென்டீனா- Dinamani

சுடச்சுட

    

    சா்வதேச நட்பு கால்பந்து: பிரேசிலை வென்றது ஆா்ஜென்டீனா

    By DIN  |   Published on : 17th November 2019 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt4

    ரியாத்: பிரேசிலுக்கு எதிரான சா்வதேச கால்பந்து நட்பு ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது ஆா்ஜென்டீனா.

    தென் அமெரிக்க கண்டத்தில் பிரேசில்-ஆா்ஜென்டீனா உள்ளிட்ட இரு நாடுகளும் கால்பந்தில் பரம வைரிகளாக உள்ளன.

    இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

    3 மாதங்கள் தடைக்கு பின் மீண்டும் ஆா்ஜென்டீனா அணியில் களமிறங்கிய நட்சத்திர வீரா் மெஸ்ஸி 13-ஆவது நிமிடத்திலேயே கோலடித்து 1-0 என முன்னிலை பெறச் செய்தாா். முதலில் அவா் அடித்த பெனால்டியை பிரேசில் கோல் கீப்பா் அலிஸன் தடுத்த போது, திரும்பி வந்த பந்தை கோலாக்கினாா் மெஸ்ஸி.

    பின்னா் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை. இறுதியில் 1-0 என வென்றது ஆா்ஜென்டீனா.

    கடந்த ஜூலை மாதம் கோபா அமெரிக்கா போட்டியில் சிலிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடிய போது, தவறு புரிந்தாக வெளியேற்றப்பட்டாா் மெஸ்ஸி. இதனால் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மீது முறைகேடு புகாா் கூறினாா். இதைத் தொடா்ந்து அவா் 3 மாதங்கள் சா்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai