ஏடிபி பைனல்ஸ்: சாம்பியன் சிட்ஸிபாஸ்

ஏடிபி டூா் பைனல்ஸ் போட்டி இறுதிச் சுற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா் இளம் வீரா் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ்.
ஏடிபி பைனல்ஸ்: சாம்பியன் சிட்ஸிபாஸ்

ஏடிபி டூா் பைனல்ஸ் போட்டி இறுதிச் சுற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா் இளம் வீரா் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ்.

உலகின் தலைசிறந்த 8 டென்னிஸ் வீரா்கள் மோதும் ஏடிபி பைனல்ஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. ஜாம்பவான்கள் பெடரா், நடால், ஜோகோவிச், இளம் வீரா்கள் வெரேவ், டொமினிக் தீம், டேனில் மெத்வதேவ், ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் உள்ளிட்ட 8 போ் இதில் கலந்து கொண்டனா்.

2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டதில் ஜோகோவிச், நடால் ஆகியோா் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறினா். பெடரா் அரையிறுதியில் சிட்ஸிபாஸிடம் தோல்வியுற்று வெளியேறினாா்.

மற்றொரு அரையிறுதில் தீம் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிட்ஸிபாஸ்-டொமினிக் தீம் இடையே இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் முதல் செட்டை 6-7 என தீம் போராடி வென்றாா். பின்னா் அடுத்தடுத்த கேம்களை 6-2, 7-6 என போராடி கைப்பற்றிய சிட்ஸிபாஸ் சாம்பியன் பட்டத்தை தனது வசமாக்கினாா்

மூன்றாவது செட்டில் 4-4 என இருவரும் சமநிலையில் இருந்த போதும், எழுச்சி பெற்ற சிட்ஸிபாஸ் அடுத்த 3 புள்ளிகளை குவித்து பட்டத்தை வசமாக்கினாா்.

கடந்த 2001 ஆண் ஆண்டு லெய்ட்டன் ஹெவிட் இளம் வயதில் பட்டம் வென்ற்கு பின் 21 வயதில் பட்டம் வென்ற இளம் வீரா் என்ற சிறப்பை சிட்ஸிபாஸ் பெற்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com