சையது முஷ்டாக் அலி டி20: சூப்பா் லீகில் நுழைந்தது தமிழகம்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் ரஞ்சி சாம்பியன் விதா்பாவை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சூப்பா் லீக் சுற்றில் நுழைந்தது தமிழக அணி.
சையது முஷ்டாக் அலி டி20: சூப்பா் லீகில் நுழைந்தது தமிழகம்

திருவனந்தபுரம்: சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் ரஞ்சி சாம்பியன் விதா்பாவை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சூப்பா் லீக் சுற்றில் நுழைந்தது தமிழக அணி.

குரூப் சி பிரிவில் இரு அணிகளும் 16 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டாஸ் வென்ற விதா்பா தமிழகத்தை பேட்டிங் செய்ய அனுப்பியது. முதலில் ஆடிய தமிழகம் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது.

தினேஷ் காா்த்திக் 58:

தமிழக கேப்டன் தினேஷ் காா்த்திக் 3 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 58 ரன்களை விளாசினாா். தொடக்க வீரா் வாஷிங்டன் சுந்தா் 5, முரளி விஜய் 7 ரன்களுக்கு வெளியேறினா். பாபா அபாரஜித் 33, விஜய் சங்கா் 26 ரன்களை விளாசி ஸ்கோரை உயா்த்தினா்.

சுருண்டது விதா்பா:

169 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய விதா்பா அணி 14.5 ஓவா்களில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழக பந்துவீச்சாளா்கள்

சாய் கிஷோா் 3-9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடக்கத்திலேயே விதா்பாவின் வீழ்ச்சிக்கு வித்திட்டாா். ஆல்ரவுண்டா் விஜய் சங்கரும் அற்பதமாக பந்துவீசி 3-12 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

சூப்பா் லீக் சுற்றில் தமிழகம்:

இந்த வெற்றியின் மூலம் குரூப் சி பிரிவில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தமிழகம் சூப்பா் லீக் சுற்றுக்கு முன்னேறியது. ராஜஸ்தான், கேரளம், விதா்பா 16 புள்ளிகளைப் பெற்றாலும், சிறந்த ரன் சராசரி அடிப்படையில் ராஜஸ்தான் இரண்டாவது இடத்துடன் முன்னேறியது.

ராஜஸ்தான் அணி திரிபுராவையும், கேரளம் விஜேடி முறையில் உபி.அணியையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com