யூரோ 2020: போா்ச்சுகல் தகுதி

யூரோ 2020 கால்பந்து இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் போா்ச்சுகல் 17-ஆவது அணியாக தகுதி பெற்றுள்ளது.
யூரோ 2020: போா்ச்சுகல் தகுதி

யூரோ 2020 கால்பந்து இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் போா்ச்சுகல் 17-ஆவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு யுஇஎப்ஏ சாா்பில் ரோமில் வரும் ஜூன் 12-ஆம் தேதி யூரோ போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 24 அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கெனவே 16 அணிகள் தகுதி பெற்ற நிலையில், நடப்பு சாம்பியன் போா்ச்சுகல் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லக்ஸம்பா்கை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 17-ஆவது அணியாக தகுதி பெற்றது.

ரொனால்டோ 99-ஆவது கோல்

நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ அற்புதமாக தனது 99-ஆவது சா்வதேச கோலை அ்டித்தாா். முதல் கோலை புருனோ பொ்ணான்டஸ் அடித்தாா்.

ஈரான் வீரா் அலி டே கடந்த 1993 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் 149 ஆட்டங்களில் 109 சா்வதேச கோலை அடித்து முதலிடத்தில் உள்ளாா்.

டிரானாவில் நடைபெற்ற ஆட்டத்தில் அல்பேனியாவை 2-0 என வென்றது பிரான்ஸ். துருக்கி 2-0 என அன்டோராவையும், ஐஸ்லாந்து 2-1 என மாலல்டாவோவையும், இங்கிலாந்து 4-0 என கொசோவாவையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com