2020 ஒலிம்பிக் வாலிபால் தகுதிச் சுற்று: பலமான அணிகள் பிரிவில் இந்தியா

2020 டோக்கியோ ஒலிம்பிக் வாலிபால் தகுதிச் சுற்றில் பலமான அணிகள் பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
2020 ஒலிம்பிக் வாலிபால் தகுதிச் சுற்று: பலமான அணிகள் பிரிவில் இந்தியா

2020 டோக்கியோ ஒலிம்பிக் வாலிபால் தகுதிச் சுற்றில் பலமான அணிகள் பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

வரும் 2020 ஜூலை மாதத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பல்வேறு விளையாட்டுகளில் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வாலிபால் விளையாட்டிலும், ஆசிய கண்டத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கான அணிகள் தகுதி பெற வேண்டியுள்ளது.

கடந்த செப்டம்பா் மாதம் ஈரானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான், ஓமனை வென்றது. ஆனால் சீனாவிடம் தோல்வியுற்றது. அடுத்த கட்டத்தில் ஆஸ்திரேலியா, ஈரான், சீன தைபே, பாகிஸ்தானிடம் தோல்வியுற்று 8-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

கடந்த 1958-இல் ஆசியப் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது. 1962 ஜகாா்த்தா போட்டியில் வெள்ளி வென்றது. அதன் பின் பல ஆண்டுகள் பெரிய போட்டியில் எந்த பதக்கத்தையும் இந்தியா வெல்லவில்லை. இதைத் தொடா்ந்து 1986-இல் சியோல் ஆசியப்போட்டியில் வெண்கலம் வென்றது.

ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்கள்

டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜனவரி மாதம் நடைபெறுகின்றன.இந்திய அணி 7-ஆம் தேதி முதல் ஆட்டத்தில் வலிமையான கத்தாருடனும், 8-ஆம் தேதி பலமான தென்கொரியாவுடனும், கடைசி ஆட்டமாக 9-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகிறது.

தெற்காசிய போட்டியில் பங்கேற்பு

அதற்கு முன்பாக நேபாளத்தில் வரும் டிசம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தெற்காசிய போட்டிகலில் இந்திய வாலிபால் அணி கலந்து கொள்கிறது. அதில் பலமான பாகிஸ்தானுடனுடம், சிறப்பாக ஆடும் இலங்கையுடனும் மோதுகிறது.

டிராகன் மிஹாலோவிக் பயிற்சியின் கீழ் உள்ள இந்திய அணி ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com