பகலிரவு டெஸ்ட் காய்ச்சலில் ரஹானே!

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் எந்தளவுக்கு இந்திய வீரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ரஹாவின் ட்விட்டர் பதிவிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
பகலிரவு டெஸ்ட் காய்ச்சலில் ரஹானே!

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் எந்தளவுக்கு இந்திய வீரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ரஹாவின் ட்விட்டர் பதிவிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் முதல்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. நவம்பா் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் காா்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் எஸ்.ஜி. இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படுகிறது. மதியம் 1 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகி, இரவு 8 மணிக்கு நிறைவுபெறும். 

இதனிடையே இந்திய நடுவரிசை பேட்ஸ்மேன் ரஹானே ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரலாற்றுச் சிறப்புமிக்க இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் குறித்து கனவு காண்கிறேன் என்று எழுதி ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் படுக்கையில் உள்ள ரஹானே, இளஞ்சிவப்பு பந்தை அருகில் வைத்துக்கொண்டு உறங்குவதாக அந்தப் புகைப்படம் உள்ளது. 

இதனால் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் பகலிரவு டெஸ்ட் என்பது சாதாரண ஒன்றாக இருக்காது என்பது இதன்மூலம் வெளிப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com