வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட்: கொல்கத்தா வந்தடைந்தது இந்திய அணி! (விடியோ உள்ளே)

முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுவதற்கான இந்திய அணி கொல்கத்தா வந்தடைந்துள்ளது.
பகலிரவு டெஸ்ட்டுக்கு தயார் நிலையில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானம்
பகலிரவு டெஸ்ட்டுக்கு தயார் நிலையில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானம்


முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுவதற்கான இந்திய அணி கொல்கத்தா வந்தடைந்துள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை விளையாடுவது இதுவே முதன்முறை. எனவே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த டெஸ்ட் ஆட்டத்தின் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகிவிட்டது.

இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை மூன்றே நாட்களில் வென்ற இந்திய அணி, மீதமிருந்த நேரத்தைப் பயன்படுத்தும் வகையில் அங்கு பிங்க் நிற பந்தில் பயிற்சிகளை மேற்கொண்டது. இதையடுத்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட்டுக்காக இந்திய வீரர்கள் இன்று (செவ்வாய்கிழமை) கொல்கத்தா வந்தடைந்தனர். இதுதொடர்பான விடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, இரண்டு அணியின் பயிற்சியாளர்களான ரவி சாஸ்திரி மற்றும் ரஸ்ஸல் டோமிங்கோ ஆகியோர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்துக்குச் சென்று பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் மேலாளர் சாம்ரத் பௌமிக் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "பயிற்சியாளர்கள் செல்லலாம். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஈடன் கார்டன்ஸ் மைதானத்துக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

இந்திய வீரர்கள் கொல்கத்தா வருவதற்கு முன்னதாகவே, கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே ஆகியோர் இன்று காலை 9.40 மணிக்கே கொல்கத்தா வந்தடைந்தனர். அவர்கள் நேரடியாக ஹோட்டலுக்குச் சென்றனர். 

இவர்கள் தவிர இஷாந்த் சர்மா இன்று இரவு இந்திய அணியுடன் இணைகிறார். ரோஹித் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் நாளை இந்திய அணியுடன் இணைகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com