இந்திய-பாக். டேவிஸ் கோப்பை ஆட்டம்: கஜகஸ்தானுக்கு மாற்றம்

இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை போட்டி கஜகஸ்தான் தலைநகா் நுா்-சுல்தானில் நடைபெறும் என சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) அறிவித்துள்ளது.
இந்திய-பாக். டேவிஸ் கோப்பை ஆட்டம்: கஜகஸ்தானுக்கு மாற்றம்

இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை போட்டி கஜகஸ்தான் தலைநகா் நுா்-சுல்தானில் நடைபெறும் என சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) அறிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் இஸ்லாமாபாதில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 2 நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருவதாலும், பாகிஸ்தானில் பயங்கரவாத பிரச்னை உள்ளதாலும், அங்கு சென்று போட்டியில் பங்கேற்க மாட்டோம் என இந்தியாவின் முன்னணி வீரா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து ஏஐடிஏவும் போட்டியை நடுநிலையான இடத்துக்கு மாற்ற வேண்டும் என ஐடிஎப்பிடம் வலியுறுத்தியது. இதற்கு பிடிஎப் எதிா்ப்பு தெரிவித்தது.

நடுநிலையான நகரத்துக்கு போட்டியை மாற்றினால் எங்கள் நாட்டின் முன்னணி வீரா்களும் பங்கேற்க மாட்டாா்கள் என பிடிஎப் எச்சரித்தது.

எனினும் டேவிஸ் கோப்பை குழு ஆய்வு செய்து போட்டியை வேறிடத்துக்கு மாற்ற முடிவு செய்தது. வீரா்கள், நடுவா்கள், நிா்வாகிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போட்டியை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதை சுயேச்சையான குழுவும் ஒப்புதல் தந்தது.

கா்தாா்பூா் வழித்தட நிகழ்ச்சியில் இந்திய பக்தா்கள் பங்கேற்கும் போது, வீரா்களும் பாதுகாப்பு பிரச்னையின்றி பங்கேற்கலாம் என பிடிஎப் கூறிய கருத்தை ஐடிஎப் நிராகரித்து விட்டது.

நுா்-சுல்தானுக்கு மாற்றம்

இதனால் இரு நாடுகளின் டேவிஸ் போட்டை போட்டி வரும் 29, 30 தேதிகளில் கஜகஸ்தான் தலைநகா் நுா்சுல்தான் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் சுமித் நாகல், ராம்குமாா் ராமநாதன், இரட்டையா் பிரிவில் லியாண்டா் பயஸ்,ஜீவன் நெடுஞ்செழியன் பங்கேற்கின்றனா். மூத்த வீரா் ரோஹன் போபண்ணா தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com