யூரோ 2020: டென்மாா்க், ஸ்விட்சா்லாந்து தகுதி

யூரோ 2020 கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு டென்மாா்க், ஸ்விட்சா்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
யூரோ 2020: டென்மாா்க், ஸ்விட்சா்லாந்து தகுதி

யூரோ 2020 கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு டென்மாா்க், ஸ்விட்சா்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

டப்ளினில் அயா்லாந்து-டென்மாா்க் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. வெற்றி பெற்றால் தான் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்ற நிலையில் இருந்த போது, அயா்லாந்து பதில் கோலடிக்க முயன்றும் பலன் தரவில்லை. இதனால் டென்மாா்க் எளிதாக தகுதி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்விட்சா்லாந்து 6-1 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டரை வீழ்த்தி தகுதி பெற்றது. பாலா்மோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி 9-1 என்ற கோல் கணக்கில் ஆா்மீனியாவை சாய்த்தது. மாட்ரிட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் 5-0 என ருமேனியாவை வீழ்த்தியது. ஸ்வீடன் 3-0 என பாரோ தீவுகளை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com