எப்போது ஓய்வு?: ரோஜர் ஃபெடரர் பதில்!

38 வயது ரோஜர் ஃபெடரர், தன்னுடைய ஓய்வு குறித்த எதிர்பார்ப்புகளுக்குப் பதில் அளித்ததாவது...
எப்போது ஓய்வு?: ரோஜர் ஃபெடரர் பதில்!

103 பட்டங்களைப் பெற்றுள்ளார் ரோஜர் ஃபெடரர். 2018 ஜனவரியில் கடைசியாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில். அதன்பிறகு ஏழு ஏடிபி பட்டங்களை வென்றுள்ளார். இதுவரை மொத்தமாக 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மகத்தான டென்னிஸ் வீரராகப் பெயர் பெற்றுள்ளார்.  

38 வயது ரோஜர் ஃபெடரர், தன்னுடைய ஓய்வு குறித்த எதிர்பார்ப்புகளுக்குப் பதில் அளித்ததாவது:

என்னுடைய ஓய்வு என்னுடைய உடல்நலனைப் பொறுத்துத்தான் அமையும். தற்போது ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை. 35, 36 வயதுக்குப் பிறகு விளையாட மாட்டேன் என நினைத்தேன். ஆனால் இன்று வரை விளையாடி வருகிறேன். நல்ல உடற்தகுதியுடன் விளையாடி வருவதால் எப்போது நிறுத்துவேன் எனக் கணிக்க முடியாது. 

2009-ல் தொடர்ந்து விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பினேன். இப்போது 10 வருடங்கள் ஆனபிறகும் விளையாடி வருகிறேன். எப்படி முடியப் போகிறது எனத் தெரியாது. ஓய்வு என்பது உணர்வுபூர்வமாகவும் நல்லவிதமாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com